திருமாவளவனின் அடையாளம் என்ன? - கோவையில் பாஜக வேலூர் இப்ராஹிம் சர்ச்சை பேச்சு

தான் எந்த மதத்தை சார்ந்தவன் என்பதை காட்டாமல் இஸ்லாமியர்களை ரவுடிகளாக மாற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவனை திருநங்கை என்பதா, ஆண் என்பதா? பெண் என்பதா? என்று பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கேள்வியெழுப்பியுள்ளார்.



கோவை: தான் எந்த மதத்தை சார்ந்தவன் என்பதை காட்டாமல் இஸ்லாமியர்களை ரவுடிகளாக மாற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவனை திருநங்கை என்பதா, ஆண் என்பதா? பெண் என்பதா? என்று பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கேள்வியெழுப்பியுள்ளார்.

தாய்-தந்தையை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்கள் வாழ் நாள் முழுவதும் படிப்பதற்கான செலவு மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதி உதவியை வழங்கும் விழா கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.



இதில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கினார்.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், திமுக இந்து மக்களின் மனதை புண்படுத்துகின்றது. நாங்கள் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான கட்சி என்று திமுக., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.



கடந்த மாதம் கோவையில் 50-இஸ்லாமியர்கள் பா.ஜ.க.,வில் இணைந்தனர். இன்றும் பலர் இணைய உள்ளனர். மதுபான கடைகள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட நெருக்கடி மிகுந்த இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவில்களுக்கு கட்டுப்பாடுகள் என்பதை திமுக என்ற இந்து விரோத அரசு செய்கிறது.

எங்கள் மாநில தலைவர் 10-நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் கட்டுப்பாடுகளை விளக்கிக் கொள்ளா விட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

எங்கு சென்றாலும் வி.சி.க தொண்டர்கள் எனக்கு எதிராக போராடி வன்முறையை தூண்டுகின்றனர். என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

தான் எந்த மதத்தை சார்ந்தவன் என்பதை காட்டாமல் இஸ்லாமியர்களை ரவுடிகளாக மாற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவனை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை. பெண்களுக்கு பெண் என்ற அடையாளம் உண்டு ஆண்களுக்கு ஆண் என்ற அடையாளம் உண்டு திருநங்கைகளுக்குத் திருநங்கை என்ற அடையாளம் கூட உண்டு ஆனால் இவருக்கு எவ்வித அடையாளத்தை சொல்லி அடையாளப்படுத்துவது என்று தெரியவில்லை.

இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் காக்க வந்தவர் போல் வந்து, ரவுடிகளாக மாற்ற முயற்சி செய்கிறார். கிறிஸ்தவ சமூகத்தை வன்முறை சமூகமாக மாற்ற திருமா நாடகமாடுகிறார்.

வெளி மாநிலங்களிலிருந்து பருப்பு உட்பட பல பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன. பிறகு எப்படி 'மேட் இன் தமிழ்நாடு' செல்லுபடியாகும்? இது பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் உள்ளது.

தி.மு.க ஆட்சி நடைபெறும் போது காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்தி முடித்துள்ளது. அதன் முடிவுகளே வெளியாகியுள்ளது. தமிழக ஊட்டங்கள் நேர்மையாகச் செயல்பட வேண்டும்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...