வால்பாறையில் கொரோனா தொற்றை தடுத்திட வீடு வீடாக சளி, காய்ச்சல் ஆய்வு பணிகள் தீவிரம்..!

மேலும், சாலைகளில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கோவை: வால்பாறையில் கொரோனா தொற்றை தடுத்திட வீடு வீடாக சளி, காய்ச்சல் ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



அதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகராட்சி மூலம் வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை, வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று நகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் வால்பாறை பிரதான சாலை, காந்தி சிலை பேருந்து நிலையம், புது மார்க்கெட், நகைக் கடை வீதி, பிரதான சாலை, கோ ஆப்பரேட்டிங் காலனி, நடுமலை சாலை, அண்ணா நகர், கக்கன் காலனி உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சாலைகளில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...