வேலையில்லா விரக்தி: சி என் சி ஆப்பரேட்டர் தற்கொலை.!!

ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓராண்டாகச் சரியான வேலை இல்லாமல், கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் மனம் உடைந்த சி.என்.சி ஆப்பரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் மனம் உடைந்த சி என் சி ஆப்பரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சுந்தராபுரம் அடுத்த அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்தன்(31). இவர் சிஎன்சி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓராண்டாகச் சரியான வேலை இல்லாமல் தவித்து வந்தார்.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத சூழ்நிலையிலிருந்து வந்தார். இந்நிலையில் மனைவி ஶ்ரீதேவி மற்றும் குழந்தைகளைத் தனது பாட்டி வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

மனம் உடைந்த நிலையிலிருந்த ஆனந்த் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரது சகோதரரின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவைத் தட்டியபோது திறக்காததால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார்.

அப்போது ஆனந்த் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் இதுகுறித்து போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...