வால்பாறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட புலி மேல் சிகிச்சைக்காக இடமாற்றம்..!

வால்பாறையில் 13 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு பிடிக்கப்பட்ட எட்டுமாத புலிக்குட்டியை வனத்துறையினர் மேல்சிகிச்சைக்காக இடம் மாற்றியுள்ளனர்.


கோவை: கோவை வால்பாறையில் 13 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு பிடிக்கப்பட்ட எட்டுமாத புலிக்குட்டியை வனத்துறையினர் மேல்சிகிச்சைக்காக இடம் மாற்றியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடிஷ் பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பட்டப்பகலில் ஊருக்குள் சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் பிடித்து ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித வன விலங்கு மோதல் தடுப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

புலி ஆண் புலி என்பதும் 8 மாதம் ஆன குட்டிப்புலி என்பதும் தெரியவந்தது. புலிக்கு சிகிச்சை அளிக்க திருநெல்வேலியிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்கு மருத்துவர் மற்றும் பேராசிரியர் தலைமையில் குழு அமைத்து புலிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

புலியின் உடலில் முள்ளம்பன்றியின் முள் குத்தியதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், முள்ளம்பன்றியை வேட்டையாடும் பொழுது முட்கள் குத்தி காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

இந்த சிகிச்சையில், புலியின் உடலிலிருந்து முள்ளம்பன்றி முட்களை எடுத்தனர். மருந்துகள் செலுத்தியும், இறைச்சிகள் வழங்கியும் உடல்நிலையை சரி செய்தனர்.

இந்நிலையில், புலியினை சிறிய கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், புலியை பெரிய கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், இரவு புலியை மானாம்பள்ளியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரிய கூண்டு அமைத்து வனப்பகுதியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...