கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (20.12.2016) நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பேசுகையில்; “ நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி  அவர்களால் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது திங்கள் முதல் வெள்ளி வரை, அதாவது திங்கட்கிழமை அன்று மத்திய மண்டலத்திற்கும், செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலத்திற்கும், புதன் கிழமை அன்று மேற்கு மண்டலத்திற்கும், வியாழக்கிழமை அன்று தெற்கு மண்டலத்திற்கும், வெள்ளிக் கிழமை அன்று வடக்கு மண்டலத்திற்கும் நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை குறைதீர்ககும் பெட்டியில் போடப்பட்டு, அம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட ஐந்து மண்டலங்களின் அலுவலகத்திற்கு தினமும் மாலை 4.30 மணியளவில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களிடமும் நேரடியாகச் சென்று பொது மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று (20.12.2016) கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், சாலைகள் சீரமைக்கும் பணிகள் என பல்வேறு உதவிகள் கோரி 28 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர்  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி அவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...