சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: கோவை சைல்டுலைன் 1098 சார்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

கோவை சைல்டுலைன் 1098, சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் சார்பில், பொள்ளாச்சி, பெரிய நெகமம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


கோவை: பொள்ளாச்சி அடுத்த வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய நெகமம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று அனுசரிக்கப்பட்டது.

கோவை சைல்டுலைன் 1098, சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் சார்பில், பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், குழந்தைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது பற்றியும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றி பேசினார். விழிப்புணர்வு கூட்ட கருத்தரங்கில், சமூக நலத்துறை சார்பாக குழந்தை திருமணம் பற்றியும், அதனால் வரும் பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரிய நெகமம் காவல்துறை அலுவலர்கள், மனோரஞ்சிதம் மற்றும் முத்து கல்யானி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் சாவித்திரி, பெண் குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் பற்றி பேசினர்.



நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்கள் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...