உள்ளாட்சி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளரின் வாக்கை அவரின் கணவரே பதிவு செய்ததாக, பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி தேர்தலுக்கு முன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேர்தல் தினத்தன்று, வரதப்பம்பாளையம் வாக்குச்சாவடியில் அவரது கணவர் அவர் பேரில் வாக்கு செலுத்தியதா, பா.ஜ.க சார்பில் புகார்.


திருப்பூர்: கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் வாக்கை அவரின் கணவரே பதிவு செய்ததாக, பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம், இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட ஊராட்சியின் 10 வது வார்டுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. காங்கேயம் ஒன்றியத்தில் 10 ஊராட்சியும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 4 ஊராட்சியை சேர்ந்த மக்களும் இதில் வாக்களித்துள்ளனர். தேர்தலில், திமுக சார்பில் கிருஷ்ணவேணி என்பவரும், அதிமுக சார்பில் லட்சுமி சோமசுந்திரம் என்பவரும், நா.த.க உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால், தேர்தல் தினத்தன்று, அவரின் வாக்கை கிருஷ்ணவேணியின் கணவரே பாப்பினியில் உள்ள வரதப்பம்பாளையம் வாக்குச்சாவடியில் செலுத்தியாக பா.ஜ.க சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பாக உரிய விசாரனை நடத்தக்கோரியும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரியும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...