சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை: கோவையில் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2,450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 6-பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drug என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடத்திய அதிரடி சோதனையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த R.கோகுல் (வயது 21), A.செல்வம்@ ரங்கநாதன்(வயது 51), துடியலூர் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த T.சந்தோஷ் குமார் (வயது23), கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த S. சேகர் (வயது 22), D.தாரணியன்(வயது 23) மற்றும் தடாகம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த G.கர்ணன் (வயது47) ஆகிய 6-நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 2.450 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.