கோவையில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை: கல்லூரி வாசலில் கஞ்சா விற்ற 2-வாலிபர்கள் கைது.!!

திருக்கோவில் நகர் அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தன. இதனை அந்த வழியாக ரோந்து சென்ற சாய்பாபா காலனி சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் பார்த்து கஞ்சா விற்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கல்லூரி வாசலில் கஞ்சா விற்ற 2-வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கல்லூரி முன்பு மாணவர்களைக் குறிவைத்துச் சேர்த்து வைத்து. விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு உள்ள டீக்கடையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தேனி மேல மங்கலத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் வயது 27, என்பவரைக் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 3-கிலோ கஞ்சா, ஒரு செல்போன், ரூபாய் 200-பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் சூரிய பிரகாஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் திருக்கோவில் நகர் அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தன. இதனை அந்த வழியாக ரோந்து சென்ற சாய்பாபா காலனி சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் பார்த்து கஞ்சா விற்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலாண்டி பாளையத்தைச் சேர்ந்த சியாம் ராகுல் 25-என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து போலீசார் 5-கிலோ கஞ்சா ஒரு செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். சியாம் ராகுலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...