கிணத்துக்கடவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை அமைக்க 14-பேருக்கு அனுமதி-வருவாய்த்துறை தகவல்.!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 17-பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 14-பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 17-பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 14-பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு கிணத்துக்கடவு, வடசித்தூர், காட்டம்பட்டி, நல்லட்டிபாளையம், சொலவம்பாளையம், வட புதூர் ஆகிய பகுதிகளிலிருந்து 17-பேர் விண்ணப்பித்திருந்தனர்.



பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம் கொடுத்திருந்த நபர்கள் குறித்து ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த பகுதிகளில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினார்.



இதில் கிணத்துக்கடவில் 2-கடைகள், நல்லட்டிபாளையத்தில் ஒரு கடை என மொத்தம் 3-கடைகள் பட்டாசு கடை வைப்பதற்குத் தகுதி வாய்ந்த இடம் இல்லாததால் அந்த 3-பகுதிகளில் பட்டாசு கடை வைக்க அனுமதி இல்லை என ரத்து செய்தார்.

தற்போது கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் விண்ணப்பித்திருந்த 17-கடைகளில் 14-பட்டாசு கடைகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.

இந்த ஆய்வின்போது சப்-கலெக்டருடன் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் விமல்மாதவன், வாசுதேவ் உட்பட வருவாய்த்துறையினர் உடன் சென்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...