கிணத்துக்கடவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 5-வாகனங்கள் பறிமுதல்.!!

கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 5-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 5-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தமிழக கேரளா எல்லை பகுதியில் உரிய ஆவணங்கள் மற்றும் சாலைவரி கட்டாமல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் இன்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான சொக்கனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது சாலை வரி கட்டாமல் இருப்பதும், அதேபோல் கேரளா என் பதிவு கொண்ட ஆட்டோ ஒன்று தமிழகப் பகுதியில் பர்மிட் இல்லாமல் சென்று வருவதும், டாட்டா ஏசி வாகனம் ஒன்றும் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் வடக்கிபாளையம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவ்வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை சோதனை செய்ததில் அந்த லாரிகளும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, உரிய ஆவணம் இல்லாமல் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்ட 5-வாகனங்களும் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...