மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கோவை ஆட்சியர் அணிவித்த காலனி விவகாரம்: உடனே காலனி வழங்கிய மாற்றுத் திறனாளிகள் நலத்துறையினர்...!

சிறுவனுக்கு சரியான அளவு இல்லாத காரணமாக, காலனியை பொருத்த முடியாத சூழல் ஏற்பட்டது. காலனியை சரி செய்யும் நபர் கால தாமதம் செய்ததின் காரணமாக தாமதம் ஏற்பட்டது என ஆட்சியர் விளக்கம்.



கோவை: கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் இழுத்தடித்ததாக செய்தி வெளியான நிலையில், அந்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, மாற்று திறனாளிகள் நலத்துறையினர், அந்த சிறுவனுக்கு சேர வேண்டிய காலனியை இன்று வழங்கினர்.

கோவை போத்தனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான வேல்முருகன். அப்பகுதியில், பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம், தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க குடும்பத்துடன் வந்திருந்தார், வேல்முருகன். அப்போது, மாற்றுத்திறனாளியான வேல்முருகனின் மகனுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட காலனிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறுவனுக்கு அணிவித்தார். ஆட்சியரின் இந்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், அந்த நிகழ்வு முடிந்ததும், காலனியை பழுது பார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், அவற்றை திரும்ப பெற்று கொண்டதாகவும், அதிகாரிகளிடம் கேட்டபோதும், காலனியை கொடுக்காமல் இரண்டு மாதமாக இழுத்தடித்து வருவதாக, வேல்முருகன் நேற்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், அது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குச் சென்றது.உடனடியாக, சிறுவனுக்கு காலனி வழங்க மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.மேலும், சிறுவனுக்கு சரியான அளவு இல்லாத காரணமாக அதனைப் பொருத்த முடியாத சூழலில் சரி செய்ய கொடுக்கப்பட்டதாகவும் காலணிகள் சரி செய்யும் நபர் கால தாமதம் செய்ததின் காரணமாக தாமதம் ஏற்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...