கோவையின் முக்கிய சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவு: துர்நாற்றத்தால் அவதியுறும் பொதுமக்கள்.!!

மழை காலங்களில் ஆவாரம் பாளையம் சாலையில் ஆண்டுதோறும் சாக்கடை நீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுவதாகவும், மாநகரின் முக்கிய சாலை என்பதால் நிரந்தர தீர்வை மாநகராட்சி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.



கோவை: கோவையில் மாநகர பகுதியின் முக்கிய சாலையில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

கோவை மாநகர பகுதியில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கோவை காந்திபுரம் அருகே அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் அருகிலுள்ள ஆவாரம் பாளையம் சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கின் நுழைவாயில் அமைந்துள்ள சாக்கடை கால்வாயிலிருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது.



மழை காரணமாகச் சாக்கடை கால்வாயில் நீர் அதிகளவு வருவதால், இதுபோன்று சாக்கடை நீர் வெளியேறி வருகிறது.



இதனால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடி வாகன ஓட்டிகளுக்கும், பாத சாரிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.



மேலும், சாக்கடை நீர் வெளியேறுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அருகிலேயே மருத்துவமனை, உணவகங்கள் உள்ளதால் சாக்கடை நீர் வெளியேற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அப்பகுதி மக்கள், மழை காலங்களில் இதுபோன்று ஆண்டுதோறும் அதேபகுதியில் சாக்கடை நீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுவதாகவும், மாநகரின் முக்கிய சாலை என்பதால் நிரந்தர தீர்வை மாநகராட்சி ஏற்படுத்தித் தர வேண்டும் என்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...