கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்கும் முயற்சி முறியடிப்பு

கோவை போத்தனூரை அடுத்த சாய் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதே பகுதியில் 'பேரிலேண்ட் - சாய் அமரந்தா' என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இங்கு  130 வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.



இது குறித்து சாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் கலா கூறியதாவது :-

எங்கள் பகுதியின் ஓரத்தில் உள்ள சாலையில் சாய் அமரந்தா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தோர் தனியாக குழி தோண்டினர். மேலும், குடியிருப்பின் கழிவுகளை அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் ஆற்றில் விட இருப்பதாக கூறினர். இது குறித்து, கோவை மாநகராட்சிக்கு புகார் அளித்தோம். புகாரின் பேரில் எங்கள் பகுதி உதவி பொறியாளர் கவிதா அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.   மேலும்,போத்தனூர் போலீசாரும் வந்தனர். தொடர்ந்து, உதவி பொறியாளர் கவிதா, குடிருப்பு நிர்வாகத்தினர் தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். 



இதை தொடர்ந்து அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றங்கரை தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இங்கு உள்ள பல வீடுகளில் போர் போட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். இது போன்று, கழிவு நீரை நொய்யல் நதியில் செலுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இது போன்ற செயல்களை செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...