கேரளாவிற்கு கடத்த வைத்திருந்த 4-டன் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!!

கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்த வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 83-பைகளில் தலா 50-கிலோ வீதம் மொத்தம் 4-ஆயிரத்து 150-கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.



கோவை: கேரளாவிற்குக் கடத்த வைத்திருந்த 4-டன் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார், கோவை அருகே உள்ள ராமநாதபுரம் சிவராமன் நகரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்குள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். 83 பைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 4-ஆயிரத்து 150-கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.



இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ஆண்டிபட்டியைப் பூர்விகமாக கொண்ட முருகன் (49) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய சிவா (21) என்பவரைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி கேரளாவிற்குக் கடத்த பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...