தொடர்மழை காரணமாக காற்றாலை மின் உற்பத்தியில் தொய்வு: இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தகவல்.!!!

அடுத்த இரண்டு வாரங்களும் காற்றாலை மின் உற்பத்தி குறைவாகவே இருக்கும். இவ்வாண்டு சீசனில் மொத்த மின் உற்பத்தி செய்யப்பட்டது குறித்த விவரங்கள் அடுத்த மாதம் தெரியவரும் என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தகவல்.


கோவை: தொடர்மழை காரணமாக காற்றாலை மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக, இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகம் முழுவதும் 9-ஆயிரத்து 500-மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு உள்ளன.

ஆண்டுதோறும் மே கடைசியில் துவங்கி செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஆகும். இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் முதல் வாரத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் துவங்கியது. ஆடி மாதம் காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

ஆடி மாதத்தின் பல நாட்கள் தமிழகத்தின் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலைகள் பங்களிப்பு செய்து வந்தன. கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் இவ்வாண்டு எதிர்பார்த்தபடி 10-மில்லியன் யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IWPA) தலைவர், கஸ்தூரிரங்கையன் கூறியதாவது:-



கடந்த ஆண்டு சீசனில் 10,000 மில்லியன் யூனிட் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாண்டு சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கியது. கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டும் 10 ஆயிரம் மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என ஏற்கனவே போர்காஸ்ட் செய்து இருந்தோம்.

ஆனால் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் காற்றின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் பணிகள் தொய்வடைந்து உள்ளன.

அடுத்த பத்து நாட்களுக்கு மழை இருக்கும் என ஒரு போர்காஸ்ட் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு வாரங்களும் காற்றாலை மின் உற்பத்தி குறைவாகவே இருக்கும். இவ்வாண்டு சீசனில் மொத்த மின் உற்பத்தி செய்யப்பட்டது குறித்த விவரங்கள் அடுத்த மாதம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...