திருப்பூரில் அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் மனு!

கொரோனா பாதிப்பால் கோவில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் தடைப்பட்டதன் காரணமாக இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கோவில் திருவிழா, திருமணம், சீர் உள்ளிட்ட விசேஷங்கள் தடைப்பட்டதன் காரணமாக இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அனைத்து இசை கலைஞர்களுக்கும் மாத ஓய்வூதியம், அதே போல் இசை கருவிகள் வழங்கவும், முதியோர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும், அனைத்து இசை கலைஞர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...