காங்கேயம் சுற்றுவட்டார கிராம பகுதியில் புதிதாக இரும்பு தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு!

முறைகேடாக அமையும் இரும்பாலைக்கு அனுமதி வழங்க கூடாது என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார கிராம பகுதியில் புதிதாக இரும்பு தொழிற்சாலை அமைக்க 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா கொழுமங்குளி, சங்கரண்டாம்பாளையம், வடுகபாளையம், சிறுகிணர், கண்ணாங்கோவில் ஆகிய 5 கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வடுகபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக இரும்பு தொழிற்சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. 



ஆனால், இரும்பாலை அமைக்க முறைகேடாக அனுமதி வாங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், தொழிற்சாலை சட்டங்களின்படி முறையாக மக்களிடம் கருத்து கேட்கவில்லை என்றும், இரும்பாலை அமையும் பட்சத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

முறைகேடாக அமையும் இரும்பாலைக்கு அனுமதி வழங்க கூடாது என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...