திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கு போதை சாக்லேட்டுகள் விற்பனை: உ.பி., வாலிபர்கள் கைது.!!

உத்தரப்பிரதேசத்தில் இருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி நியூ திருப்பூரில் விற்பனை செய்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.


திருப்பூர்: நியூ திருப்பூரில் போதை சாக்லெட்களை விற்ற உ.பி., வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெருமாநல்லுார் காவல்துறை நேற்று மாலை கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நியூ திருப்பூர் ரவுண்டானா பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம், முபாரக்பூர் பகுதியைச் சேர்ந்த திரிலோகி சொங்கர்-27, கியாமுதின்-30, என்பதும் இருவரும் நியூ திருப்பூர் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் உத்தரப்பிரதேசத்திலிருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லெட்களை மொத்தமாக வாங்கி வந்து நியூ திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு ஒரு சாக்லேட் 20 ரூபாய் வீதம் விற்று வந்துள்ளனர்.

இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து 3.5 கிலோ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...