ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

வரும் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதால், ஓட்டுப் பெட்டிகள் கிணத்துகடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெ.10 முத்தூர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர்.

இந்த பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நெ.10 முத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணிவரை அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது.

மாலை 6 மணி வரை நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 144 ஆண்களும், 144 பெண்களும் என 288 பேர் வாக்களித்தனர். அதன்படி, வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 75 % பேர் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டியில் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள அறையில் ஓட்டுப் பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, வரும் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதால், ஓட்டுப் பெட்டிகள் கிணத்துகடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ஒரு டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட்ட 34 பேர் 3 பிரிவுகளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...