கோவையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு..!

ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி காவல் ஆணையர் மணிகண்டன் தனிப்படை அமைத்து. கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி காவல் ஆணையர் மணிகண்டன் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அடுத்த மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி கோவை மக்கள் தீபாவளிக்கு தேவையான பொருட்களை தற்போது கடைகளுக்கு சென்றுவாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி கமிஷனர் மணிகண்டன் தனிப்படை அமைத்து. கண்காணிப்பை தீவிரபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கார்த்தி, உமா, பூபதி உள்ளிட்ட போலீசார் கடைவீதி, பூ மார்க்கெட் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பூ மார்க்கெட் அருகே வந்த ஒரு அரசு பேருந்தில் ஏறி போலீசார் கண்காணித்தனர். அப்போது, பேருந்தில் நின்றிருந்த இளம்பென் ஒருவர் தனது அருகே நின்ற பெண் கையில் வைத்திருந்த பர்சில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்தார். இதை பார்த்த போலீசார் விரைந்து அவரின் அருகே வந்தனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் அந்த இளம்பெண் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். போலீசாரும் விடாமல் அந்த பெண்ணை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த முத்துமாரி(வயது26) என்பது தெரியவந்தது. மேலும் இவர் காலை முதல் மாலை வரை பேருந்தில் பயணித்து மற்ற பெண் பயணிகளிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும், திருடிய பணத்தை கொண்டு ஜாலியாக வாழ்ந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல், பூமார்க்கெட் பகுதியில் செல்போன் திருடிய திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்பி சிலர் திருட்டில் ஈடுபடுகிறார்கள். இதனால் தற்போது ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம், என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...