கோவையில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனி.. பிடுங்கிய அதிகாரிகள்.. எங்கே அந்த ஷூ..?

கோவையில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவது சிறுவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு, ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் - தந்தை புகார்.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வேல்முருகன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க, வேல்முருகன் அவரது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்திருந்தார். சில மாதங்களுக்கு முன், அவரது மகனுக்கு மாற்றுத்திறனாளிகள் அணியும் ஷூவை, மாவட்ட ஆட்சியர் அணிவித்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஆட்சியரைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.



எங்கே அந்த ஷூ..?

அன்று நிகழ்ச்சி முடிந்ததும், ஆட்சியர் அணிவித்த காலனியை பழுதுபார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், மீண்டும் வேல்முருகனிடம் இருந்து பெற்றுள்ளனர். பின்னர், வேல்முருகன் அதிகாரிகளிடம் கேட்ட போது, காலனியை கொடுக்காமல் இரண்டு மாதமாக இழுத்தடித்து வருவதாக, அவர் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தன் மகனுக்கு மாவட்ட ஆட்சியர் அணிவித்த காலனியை திரும்பி பெற்றுக்கொண்டதுடன், திருப்பித்தர மறுக்கின்றனர். இதனால், தனது மாற்று திறனாளி மகன் மிகுந்த சிரமப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். எனவே, இனியும் தாமதிக்காமல், மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, தன் மகனுக்கு காலணியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...