கோவை செட்டிபாளையம் பகுதியில் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்; நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்.!!

கோவை அடுத்த செட்டிபாளையம் - பல்லடம் சாலையில் உள்ள காலியாக உள்ள வீட்டுமனைப்பிரிவுக்கான ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், யாரோ மர்ம நபர்கள், மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அடுத்த செட்டிபாளையம் - பல்லடம் சாலையில் உள்ள காலியாக உள்ள வீட்டுமனைப்பிரிவுக்கான ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், யாரோ மர்ம நபர்கள், மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளைக்கொட்டிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகள் அந்த மருத்துவ கழிவுகளைத் தவறுதலாக உண்பதற்கு மற்றும் அவற்றின் கால்களில் அங்கு கொட்டபப்டுள்ள பயன்படுத்தப்பட்ட ஊசிகள் ஏறினால், உயிர்க் கொல்லி நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.



யார் இந்த மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டினார்கள்..?என்பது தெரியாமல் அப்பகுதி மக்கள் திணறி வரும் அப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் இது போன்ற மருத்துவ கழிவுகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில்கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது, என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இது போன்று அத்துமீறி மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டும் லாரி ஓட்டுனர்கள் மீதும் அதன் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இது போல் கோவை மாவட்டத்தில் ஊருக்கு வெளியில் இருக்கும் பல்வேறு இடங்களை குறித்து வைத்து, மருத்துவ கழிவுகளை கொட்டிவரும் நபர்களை அடையாளம் காண சிறப்புப் படை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கையை, சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...