தமிழக–கேரளா எல்லையில் 14-பேர் வழி தவறி சிக்கிக்கொண்ட சம்பவம்: 30-மணி நேரத்திற்குப்பின் மீட்பு.!!

தமிழக – கேரளா எல்லையான வாளையாறு வனப்பகுதியில் போதைப் பொருள் தடுப்பு தேடுதல் வேட்டைக்காகச் சென்ற 14-பேர் வனத்துக்குள் வழி தவறிச் சிக்கிக்கொண்ட சம்பவத்தில், அவர்களை 30-மணி நேரத்திற்குப் பின் வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.


கோவை: தமிழக – கேரளா எல்லையான வாளையாறு வனப்பகுதியில் போதைப் பொருள் தடுப்பு தேடுதல் வேட்டைக்காகச் சென்ற 14-பேர் வனத்துக்குள் வழி தவறிச் சிக்கிக்கொண்ட சம்பவத்தில், அவர்களை 30-மணி நேரத்திற்குப் பின்வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் மலமுலா வனப்பகுதியில் போதை பொருள் தடுப்பு தேடுதல் வேட்டைக்காக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சீனிவாசன், மலமுலா போலீஸ் ஆய்வாளர் சுனில் கிருஷ்ணா, வாளையாறு உதவி ஆய்வாளர் ராஜேஸ், மற்றும் மாவோஸ்ட் தடுப்பு பிரிவை சேர்ந்த 3-துப்பாக்கி ஏந்திய 3-வீரர்கள், டான்ஸ்செப் பிரிவைச் சேர்ந்த 5-பேர் என மொத்தம் 14-பேர் கடந்த வெள்ளியன்றுகாலை 8-மணிக்கு வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

அப்போது, சுமார் 10-கிலோ மீட்டர் தூரம் வாளையாறு வனப்பகுதியை நோக்கிச் சென்ற 14-பேரும் மாலை 4-ஆகியும் திரும்பவில்லை. மேலும், தொடர்ந்து வனப்பகுதியில் மழை பெய்து வந்ததால் வனப்பகுதியில் வழி தெரியாமல் 14-பேரும் வனப்பகுதியில் சிக்கிக்கொண்ட அவர்கள், மாலையில் வனத்துறையினரைத் தொடர்பு கொண்டு வழி தெரியாமல் சிக்கியதைத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்ததாலும், யானை நடமாட்டம் உள்ள அடர் வனப்பகுதி என்பதால், சனிக்கிழமை காலை மலமுலா, கொட்டக்காடு வனப்பகுதியிலிருந்து வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலும், வாளையாறு புதுச்சேரி வனப்பகுதியில் வனச்சரகர் இப்ராஹிம் பாதுஷா தலைமையிலான இரண்டு வனத்துறையினர் குழுவினர் அவர்களை மீட்க வனப்பகுதிக்குள் சென்றனர்.

போதை பொருள் தடுப்பு தேடுதல் வேட்டைக்காகச் சென்ற 14-பேரையும் மாலை 3- மணியளவில், தமிழக வன எல்லை பகுதியில்,கண்டுபிடித்தனர். இதையடுத்து உணவின்றி, பசியுடன் தவித்த அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கினர். இதையடுத்து அவர்களைப் பத்திரமாக மீட்டு மாலை மலமுலா எல்லைக்கு அழைத்து வந்தனர். இதனிடையே வழியில் யானைகளைக் கண்ட அச்சம் மற்றும் அட்டை தாக்கியதில் காயமடைந்த 14-பேருக்கு உளவியல் ரீதியான சிகிச்சையாக்கப்பட்டு, வீட்டிற்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...