வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி.!!

வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காலையில் உலாவந்த கரடி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரவலாகி வருகிறது.


வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காலையில் உலாவந்தகரடி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரவலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. இங்குயானை கரடி புலி சிறுத்தைஉட்பட, ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டான்மோர் தேயிலைத் தோட்டத்தில்கரடி ஒன்று உலா வந்ததைப் பார்த்து அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அலறி அடித்து ஓடினர்.

அதேநேரம் அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை ஒன்று கரடியைத் துரத்தியது. காட்டெருமையைப் பார்த்த கரடி உயிர் பிழைக்க மரத்திலேறிப் பதுங்கிக் கொண்டது.



காட்டெருமைமரத்தினடியில் சுற்றி வந்ததால் கரடி மரத்தை விட்டு இறங்காமல் மரத்திலேயே பதுங்கி இருந்தது. இதைப்பார்த்த நடைப்பயிற்சி மேற் கொண்டவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகவைரவலாகி வருகிறது.

தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியைப் பார்வையிட்டனர். தொடர்ந்து கரடி நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...