ரூ. 21,000 கோடி ஹெராயின் சிக்கிய வழக்கு: கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை; வடவள்ளி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் விசாரணை.


கோவை: இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை, குஜராத், முந்த்ரா துறைமுகத்திலிருந்துவருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்

கடந்த மாதம் 13-ம் தேதியன்று,

பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் டெல்லி, உத்தரப்பிரதேசம், நொய்டா, அகமதாபாத், சென்னை, கோவை, விஜயவாடா உள்ளிட்ட பல இடங்களில்ரெய்டு நடத்தப்பட்டது.

கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக, குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு சரக்கு கப்பலில் கடத்தப்பட்ட, 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ போதைப் பொருளை, டி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள, 'ஆஷி டிரேடிங்' கம்பெனிக்கு, 'முக பவுடர்' என எழுதப்பட்ட பார்சலில் போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால்,, இரு தினங்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிடம், இவ்வழக்கை ஒப்படைத்தது.

வழக்கின் முக்கிய திருப்பமாக, ஆஷி டிரேடிங் கம்பெனியை, மாமியார் பெயரில் நடத்தி வந்த சென்னையை சேர்ந்த மச்சாவரம் சுதாகர், 45, அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி, 39, கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட, எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், என்று கூறப்படுகிறது. டில்லி மற்றும் கேரளாவில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று காலை 9:30ல் இருந்து பல மணி நேரம், கொளப்பாக்கத்தில் சுதாகர், அவரது மனைவி வசித்து வரும் வீட்டை முழுமையாக சோதனையிட்டனர்.

இதில், மூன்று 'லேப்டாப்'கள் மற்றும் ஆவணங்கள் சிக்கி உள்ளன.அவற்றில், சென்னை, கோவை, ஆந்திரா மற்றும் கோவாவை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு, போதைப் பொருள் 'சப்ளை' செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. சோதனை முழுதும், 'வீடியோ' பதிவு செய்யப்பட்டுள்ளது.

தம்பதியின் வங்கிக் கணக்குகளையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையில் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கில், தற்போது கோவையைச் சேர்ந்த ராஜ்குமார், 45, என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது நேற்று மும்பையில் இருந்து கோவை வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் மூவர், கோவை வடவள்ளி, மருதமலை பிரதான சாலை, ராமசாமி நகரில் உள்ள ராஜ்குமாரின் சகோதரர் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் தற்போது ராஜ்குமாரின் தாய் வசிக்கிறார். ஹெராயின் கடத்தல் வழக்கு தொடர்பு குறித்த ஆவணங்கள் கிடைக்குமா? என சோதனை நடத்தினர். சோதனையில் குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அங்கிருந்த லேப்டாப், மொபைல் போன், வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை கைப்பற்றிச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...