தற்கொலை எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தனது மகனைக் காப்பாற்றுங்கள்..!! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தாய்..!

தன் மகன் மீது மருமகள் குடும்பத்தினர் தொடர்ந்து பொய்யான புகார்களைக் கொடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


கோவை: தற்கொலை எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தனது மகனைக் காப்பாற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவரம்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் தனது இரண்டாவது மகன் விஜயை காப்பாற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.

இந்த மனுவில், தனது மகன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் 2016ம் ஆண்டு முகநூலின் மூலம் அறிமுகமாகிய மோகனப்பிரியா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், 2019ம் ஆண்டு விவாகரத்து வேண்டி கோயம்புத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூன்று வயதில் இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

மோகனப்பிரியாவின் குடும்பம் பிறரின் சொத்துக்களை அபகரித்து வாழ்வதையே தொடர்ந்து செய்து வந்ததாகவும், இவர்கள் குடும்பம் வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியாமல் தன் மகன் காதலித்து திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், மோகனப்பிரியா செந்தில் என்பவரைக் கல்யாணம் செய்ய முடிவெடுத்தே இது போன்ற செயல்களை செய்வதாகவும், தன் மகனிடம் இருந்து அனைத்து சொத்துக்களையும் இவர்கள் அபகரித்துக் கொண்டதாகவும், தன் மகனிடம் இருந்து பணம் இனி பெறமுடியாது என்று அவர்களுக்குத் தோன்றியதை அடுத்து செந்தில் என்பவரின் மூலம் மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, போலீசாரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் அவர்கள் விசாரணை நடத்தித் தன் மகன் மீது எவ்வித தவறும் இல்லை என்று கூறியதை அடுத்து, பொய்யான புகார்களை மோகனப்பிரியா குடும்பத்தினர் கொடுத்து வருகின்றனர் என்றார்.

மேலும், CM CELL- லில் புகார் அளித்தும், அவர்கள் விசாரணையிலும் எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்று ஊர்ஜிதப்படுத்தினர். ஆனாலும், தொடர்ந்து வெளிநாட்டிலுள்ள என் மகனுக்குத் தொடர்ந்து அலைபேசியின் மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மேலும், தனது பேரனை என் மகனிடம் காட்ட மறுக்கின்றனர். இதனால், பெரிதும் மனவேதனை அடைந்த என் மகன் தற்கொலை செய்யும் அளவிற்குப் போய்விட்டான் என்று குறிப்பிட்டுள்ள அவர், தன் மகனை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...