பண்ணாரி சோதனை சாவடி அருகே வாகனங்களை வழிமறித்து சேட்டை செய்த ஒற்றை யானை..!! வாகன ஓட்டிகள் அவதி!

கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை குறிவைத்து பண்ணாரி சோதனைச்சாவடி மற்றும் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே யானைகள் முகாமிட்டுள்ளன.


கோவை: பண்ணாரி சோதனை சாவடி அருகே வாகனங்களை வழி மறித்து நின்று சேட்டை செய்த ஒற்றை யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலையைக் கடப்பது வாடிக்கையாகி வருகின்றன.

கடந்த சில நாட்களாக தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை குறிவைத்து யானைகள் பண்ணாரி சோதனைச்சாவடி மற்றும் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று சத்தியமங்கலம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வேன் ஒன்றை வழிமறித்து நின்றது. யானையைக் கண்டு பயந்த ஓட்டுனர் வேனை விட்டு வெளியே இறங்கி ஓடியுள்ளார்.



பின்னர், பின்புறம் வந்த ஈச்சர் வேன் ஓட்டுனர் பயங்கர சத்தத்துடன் வாகனத்திலுள்ள ஒலிபெருக்கியில் ஒலியை எழுப்பிவுடன் கோபமடைந்த காட்டு யானை பிக்கப் வேனை கோபத்துடன் கீழே தள்ள முயற்சி செய்தது.



இதனைக் கண்டு அருகே இருந்த வாகன ஓட்டுநர்கள் சத்தம் எழுப்பவே மேலும் கோபமடைந்த யானை பயங்கர சத்தத்துடன் தும்பிக்கையைத் தூக்கி பிலுரிக்கொண்டு சாலையை கடந்து சென்றது.

அதன்பின்னர் வாகனங்கள் சாலையில் செல்ல துவங்கின. வாகனங்களை வழிமறித்து நின்று சேட்டை செய்த ஒற்றை காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...