கோவையில் முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து...!!

போலீசார் விசாரணையில், மனோஜுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த அப்பாஸ், சபீர் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது தெரிந்தது.


கோவை: கோவையில் முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் சுண்டாக்காமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் மனோஜ் (21) தனியார் கல்லூரி மாணவர். இவர் நேற்று மனோஜ் செல்வபுரம் என்.எஸ்.கே., தெருவில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த இருவர், மனோஜுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜை குத்திவிட்டு தப்பினர்.

இதையடுத்து, காயமடைந்த மனோஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனிடையே, வழக்குபதிவு செய்த செல்வபுரம் போலீசார் விசாரணையில், மனோஜுக்கும், அதேபகுதியை சேர்ந்த அப்பாஸ், சபீர் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...