காடுகளின் முக்கியத்துவம், பழங்குடியினரின் நிலையான வாழ்வாதாரம், விலங்கினங்களின் நலன் மற்றும் அதில் இளந்தலை முறையினரின் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கோவை: பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறை சார்பில், இயற்கை சங்கம் மற்றும் லைஃப் டிரஸ்ட்-இந்தியா ஒருங்கிணைந்து, வனவிலங்கு வாரவிழா 08/10/2021 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்கலையில் நடந்த இவ்விழாவை துணைவேந்தர் டாக்டர். பி. காளிராஜ் தலைமை தாங்கினார். இதில் வனவிலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவம், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு ஆகியவற்றைத் துணைவேந்தர் எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் பதிவாளர் டாக்டர். கே. முருகவேல், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விலங்கியல் துறைத்தலைவர் டாக்டர். மா. ரமேஷ் வரவேற்புரை வழங்கினார்.
வனவிலங்கு வாரத்தின் முக்கியத்துவம் பற்றி டாக்டர். சி. குணசேகரன் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, லைஃப் டிரஸ்ட்-இந்தியாவின் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர். பி.ஏ. டேனியல் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதில் காடுகளின் முக்கியத்துவம், பழங்குடியினரின் நிலையான வாழ்வாதாரம், விலங்கினங்களின் நலன் மற்றும் அதில் இளந்தலை முறையினரின் பங்கு குறித்து விரிவுரையாற்றினார்.
இவ்விழாவினை இரண்டாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவிகள், துர்கா மற்றும் ரோஷன் சபிஹா தொகுத்து வழங்கினர். இறுதியாக, இயற்கை சங்கத்தின் தலைவர், மாணவர் ச.கரண் நன்றியுரை வழங்கினார்.