மொகலாய ஆட்சியை விட திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது- இந்து முன்னணி தீர்மானம்..!!

மொகலாய ஆட்சியை விட திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. பொதுக்குழுக் கூட்டத்தில் இந்து முன்னணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது


கோவை: மொகலாய ஆட்சியை விட திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என பொதுக்குழுக் கூட்டத்தில் இந்து முன்னணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

கோவையில் இந்துமுன்னணியின் பொதுக்குழுக் கூட்டம் பேரூர் பகுதியில் உள்ள சாந்த லிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் நடைபெற்றது. அப்பொழுது முகலாய அரசை விட திமுக அரசு திமுக எதிராகச் செயல்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி பொதுக்குழுக் கூட்டம் பேரூர் சாந்த லிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் நடைபெற்றது. இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் K.தசரதன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் J.s கிஷோர்குமார் தாமு வெங்கடாச்சலம் சிறப்புரையாற்றினார். மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நானூறு பேர் நகர் ஒன்றிய பொறுப்பாளர்களாக அறிவித்தார்.

பொதுக்குழு தீர்மானங்களாக:-

முகலாயர்கள் ஆட்சிக்காலத்தை விட தி.மு.க அரசின் ஆட்சி இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.

முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் புரட்டாசி அமாவாசை தினத்தன்று கூட கோவில்களைப் பூட்டியதை இந்துமுன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

கோவையில் மாநகராட்சி இடத்தை பலர் ஆக்கிரமித்து உள்ளனர். உதாரணமாக செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் மாநகராட்சி இடத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.



வாடகைக்குக் கடைகளை விட்டுள்ளனர். இதை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஇப்பொதுகுழு கேட்டுக் கொள்கிறது.

கூட்டத்தில் கோட்ட செயலாளர் S.சதிஷ் கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மாவட்டச் செயலாளர்கள் G.ரமேஷ் K.மகேஷ்வரன் K.ஆறுச்சாமி மாவட்ட துணைத்தலைவர்கள் M.r முரளி M.லீலாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...