வங்கிக் கணக்கின் ஏ.டி.எம்., ஐ பிளாக் செய்து 60-ஆயிரம் திருட்டு.!! கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை.!!

வங்கி கணக்கை பிளாக் செய்து பெங்களூரில் இருந்து கோவையைச் சேர்ந்தவர், கணக்கிலிருந்து 60-ஆயிரம் நூதன திருட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: வங்கி கணக்கை பிளாக் செய்து பெங்களூரில் இருந்து கோவையைச் சேர்ந்தவர். கணக்கிலிருந்து 60-ஆயிரம் நூதன திருட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடவடிக்கை எடுத்தனர்.

ஏ.டி.எம்., கார்டு கையில் இருக்கும் போதே, வங்கிக்கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரத்தைத் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ஜி.என்., மில்ஸை சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ், 37.

இவர் பந்தன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த மாதம், 23ம் தேதி கோவையிலிருந்த போது, அவரது மொபைல்போனுக்கு பெங்களூருவில் உள்ள ஏ.டி.எம்., எந்திரம் மூலம் இவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் பணம் எடுத்தது போல் குறுந்தகவல் வந்தது.

ஏ.டி.எம்., அவரிடம் இருக்கும் போது, பணம் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஜார்ஜ் தாமஸ், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜார்ஜ் தாமஸ் வங்கிக்கணக்கின் ஏ.டி.எம்., ஐ பிளாக் செய்து, அதிலிருந்து பணத்தை எடுத்தது தெரிந்தது. பணத்தைத் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...