செக்மோசடி வழக்கில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் முருகன் சஸ்பெண்ட்- டிஐஜி நடவடிக்கை.!!

கோவையில் பணியாற்றிவந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் மருத்துவ விடுப்பிலிருந்த போது, செக் மோசடியில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இதைத்தொடர்ந்து இன்று கோவை சரக டிஐஜி முத்துசாமி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் பணியாற்றிவந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் மருத்துவ விடுப்பிலிருந்த போது, செக் மோசடியில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இதைத்தொடர்ந்து இன்று கோவை சரக டிஐஜி முத்துசாமி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தொடரும் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை.

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் மீது கடந்த 22.09.2021 ஆம் தேதி சென்னை புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளை மேலாளராகப் பணி புரிந்துவரும் அமித்குமார் என்பவர் கொடுத்த செக் மோசடி புகாரின் பேரில் சென்னை G3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் 6 -வது எதிரியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

மேற்படி சார்பு ஆய்வாளர் மருத்துவ விடுப்பிலிருந்தபோது இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இச்செயலுக்காகக் கோவை சரக துணைத் தலைவர் (DIG)அவர்களின் ஆணையின் படி சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று (08.10.2021) பணியிடை நீக்கம்(Suspension) செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட கலையரசி இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...