மதுபான கடையை மீண்டும் திறந்தாள் பூட்டு போடும் போராட்டம்- தமுமுக கண்டனம்.!!

உக்கடம் பகுதியில் உள்ள மதுபான கடையை மீண்டும் திறந்தாள் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிய தமுமுக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: உக்கடம் பகுதியில் உள்ள மதுபான கடையை மீண்டும் திறந்தாள் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிய தமுமுக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் உக்கடம் பஸ் நிலையம் அருகிலிருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அப்புறப்படுத்த வலியுறுத்திக் கடந்த 10 பத்து வருடங்களுக்கு முன்பு பல கட்ட போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது.

இறைவனின் மாபெரும் கிருபையால் டாஸ்மாக் கடை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

டாஸ்மாக் கடை செயல்பட்ட நேரத்தில் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல், மது அருந்தி ரோட்டில் குடிமகன்கள் விழுந்து கிடந்த சூழல், அடிதடி பிரச்சனைகள் தொடர்ந்த சூழல்கள் மாற்றம் அடைந்து தற்போது நல்ல நிலையில் உக்கடம் பகுதி இருந்து வருகிறது.

மீண்டும் உக்கடத்தில் டாஸ்மார்க் கடை திறந்தால் பூட்டுப் போடும் போராட்டம் அறிவிக்கப்படும் தமுமுக அறிவித்துள்ளனர்.

மதுக்கடையை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட வழக்கு இன்றுவரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல நபர்கள் சிறை சென்றும் உள்ளார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் மதுபான டாஸ்மாக் கடை வருவதாகத் தகவல் வந்து கொண்டிருக்கிறது.

இசுலாமியப் பகுதிகளில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மதுபான கடை இருந்ததை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது மீண்டும் உக்கடம் பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் திறக்கின்ற அன்றைய தினமே டாஸ்மாக் மதுபான கடையைப் பூட்டுப் போடும் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுபானக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு மதுபானக்கடைகளை அதிகப்படுத்துவது வாக்குறுதி மீறிய செயலாக நாங்கள் கருதுகிறோம்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...