ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு: 4-பேருக்கும் ஆயுள் தண்டனை.!!

ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4-பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.



திருப்பூர்: ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4-பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.



திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 47), பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவந்தார். இவருடைய மனைவி துர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 3 வயதில் மகள், 1½ வயதில் மகன் உள்ளனர்.

சிவமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவியின் தங்கை பத்மினியின் மருமகன் ஆவார். சிவமூர்த்தி கடந்த 2018ம் ஆண்டு ஜூன்25ம் தேதி கோவைக்குச் சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது சொகுசு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

அதன்பிறகு இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய 3 செல்போன்களும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவருடைய செல்போன் எண்கள் மற்றும் மாயமான காரின் பதிவு எண்ணை வைத்து காவல்துறை துப்பு துலக்கி வந்தனர்.

சிவமூர்த்தி காரின் பதிவு எண் தமிழகம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது ஜூன் 26ம் தேதி இரவு அந்த கார் கிருஷ்ணகிரி மற்றும் வாணியம்பாடி சோதனை சாவடிகள் வழியாகக் கடந்துசென்றது கண்டறியப்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் காவல்துறைக்குத் திருப்பூர் காவல்துறை தகவல் தெரிவித்து உஷார் படுத்தினார்கள். ஆம்பூர் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறை ஜூன் 27ம் தேதி வெங்கிளி என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனை நடத்தியபோது அந்த வழியாக வந்த சிவமூர்த்தியின் காரை மடக்கிப்பிடித்தனர்.

காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்த விமல் (35), கவுதமன் (22), மணிபாரதி (22) என்பது தெரியவந்தது. 3 பேரையும் ஆம்பூர் காவல்துறை நிலையத்துக்கு அழைத்துச்சென்று காவல்துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் சிவமூர்த்தியை கடத்திச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பிணத்தை 2 நாட்களாக வாகனத்திலேயே வைத்துச் சுற்றிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் கல்லைக் கட்டி வீசிச்சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காவல்துறை கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிவமூர்த்தியின் உடலை மீட்டனர். சிவமூர்த்தியின் கை, கால் மற்றும் முகம் ‘டேப்பால்’ சுற்றப்பட்டு இருந்தது. உடலோடு ஒரு மைல்கல்லும் சேர்த்துக் கட்டப்பட்டு இருந்தது.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி(35) என்பவரையும் திருப்பூர் காவல்துறை காரமடையில் பிடித்தனர்.

கைதானவர்களில் ஒருவரான விமல் திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர் பெற்றுக்கொடுக்கும் ஏஜெண்ட் அலுவலகம் நடத்தி வந்தார். இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிவமூர்த்திக்கும், விமலுக்கும் பழக்கம் உள்ளது.

இருவரும் சேர்ந்து சுற்றுலா செல்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு விமலுக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனில் சிக்கி தவித்தார். பணம் கொடுத்து உதவுமாறு சிவமூர்த்தியிடம் விமல் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிவமூர்த்தியிடம் அதிகப் பணம் இருப்பது தெரிந்த விமல் அவரை கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டார். இதற்காக தனக்கு தெரிந்த மூர்த்தி(35) மற்றும் கட்டிடத் தொழிலாளிகளான மணிபாரதி(22), கவுதமன்(22) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு உல்லாச பயணம் போகலாம் என்று சிவமூர்த்தியிடம் விமல் கூறினார். இதை நம்பிய அவரும் ஜூன் 25–ந் தேதி காலை வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே நின்றுகொண்டிருந்த விமலை காரில் ஏற்றிக்கொண்டார்.

அப்போது காரமடை அருகே உள்ள குறுந்தமலை கோவிலுக்குச் சென்றனர். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி மணிபாரதி, கவுதமன், மூர்த்தி ஆகியோர் நின்றிருந்தனர். அவர்களை மேட்டுப்பாளையத்தில் இறங்கிவிடுமாறு விமல் கூறியதன் பேரில், 3 பேரையும் காரில் ஏற்றிக்கொண்டனர்.

சிறிது தூரம் காட்டுப்பகுதியில் சென்றதும் சிவமூர்த்தியை காரில் இருந்த 4 பேரும் சேர்ந்து அடித்து தாக்கினர். அவரை கட்டிப்போட்டு மிரட்டி சிவமூர்த்தியின் தந்தையிடம் ரூ.50 லட்சம் பறிக்க திட்டமிட்டனர். அதில் ரூ.25 லட்சத்தை விமலும், மீதமுள்ள பணத்தை மற்ற 3 பேரும் சேர்ந்து பிரிக்கவும் திட்டமிட்டு இருந்தனர். அதன்படி பணம் கேட்டு சிவமூர்த்தியை விமல் மிரட்டினார்.

அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சிவமூர்த்தி சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த 4 பேரும் சேர்ந்து அவருடைய முகத்தில் அட்டைப்பெட்டிகள் ஒட்ட பயன்படுத்தும் ‘டேப்பால்’ சுற்றினர்.

பின்னர் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் மயங்கி இறந்தது தெரியவந்தது. சிவமூர்த்தியின் சட்டைப்பையிலிருந்த ரூ.1 லட்சத்தை எடுத்து மூர்த்தியிடம் ரூ.40 ஆயிரம் கொடுத்து அவரை காரமடையில் இறக்கிவிட்டு, எஞ்சிய பணத்துடன் மற்ற 3 பேரும் காரில் பிணத்துடன் சுற்றி வந்தனர்.

ஜூன் 25–ந் தேதி மாலை சென்னை செல்வதற்காகத் தாம்பரம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர் வழியாக கெலவரப்பள்ளி அணைக்குச் சென்று சிவமூர்த்தியின் உடலோடு ஒரு மைல்கல்லை எடுத்துக் கட்டி அணைக்குள் வீசினர். அங்கிருந்து காரில் வந்தபோது தான் 3 பேரும் சிக்கியதாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. மொத்தமாக 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொலை குற்றத்திற்காக 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், கூட்டு சதியில் ஈடுபட்டதிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆட்களிடத்தில் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 பேருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது. அனைத்து தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...