நாட்டு மக்களின் உணர்வுகளைப் புறம் தள்ளி வரும் மோடி ஆட்சி துரதிர்ஷ்டவசமானது- அப்துல் ரகுமான் குற்றச்சாட்டு.!!

விவசாயிகளின் உள் உணர்வுகளை உள்வாங்க மறுத்து மத்திய அரசு புறந்தள்ளி வருவது வேதனையான ஒன்று, நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பது மோடி ஆட்சியில் தான். இது துரதிர்ஷ்டவசமானது.


பொள்ளாச்சி: நாட்டு மக்களின் உணர்வுகளைப் புறம் தள்ளி வரும் மோடி ஆட்சி துரதிர்ஷ்டவசமானது என தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் மற்றும் எக்னாமிக் சேம்பர் இணைந்து நடத்திய இஸ்லாமியப் பெண்களுக்கான அரசு உதவிகள் வழங்கும் விழா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டு இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கப்பட்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஒரு வருடமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



விவசாயிகளின் உள் உணர்வுகளை உள்வாங்க மறுத்து மத்திய அரசு புறந்தள்ளி வருவது வேதனையான ஒன்று, நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பது மோடி ஆட்சியில் தான். இது துரதிர்ஷ்டவசமானது.

ஜனநாயக ரீதியில் போராடும் விவசாயிகள் மீது வாகனங்களை ஏற்றிக்கொல்வதும், தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. உத்தரப் பிரதேச பாஜக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இதுதான் ஜனநாயக மரபு என்றும் தமிழகத்திற்கு நீட்தேர்வு பொருந்தாத ஒன்று ஏழை எளிய மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் நீட்தேர்வு கடினமானது.

இந்த உண்மை தெரிந்தும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மத்திய அரசு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஆட்சி நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...