வன இலாக்கவின் இடங்களில் இருக்க வேண்டிய தேனீ கூடுகள் சித்தாபுதூர் மேம்பாலத்தில் இருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றச்சாட்டு.
கோவை: வன இலாக்கவின் இடங்களில் இருக்க வேண்டிய தேனீ கூடுகள் சித்தாபுதூர் மேம்பாலத்தில் இருகின்றது எங்களிடம் பெரிய ஏணி இல்லை ஆட்கள் இல்லை இன்று கூறிய துறைகள் – நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்
கோவையின் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்,கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் கோவை வனத்துறைக்கான பிரத்தியேக சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் கூறுகையில்,
வனவிலங்கு மோதல் என்பது வேறு மனிதனால் கொல்லப்படுவது என்பது வேறு என்ற அவர் பத்து ஆண்டுகளுக்கான விசாரணை அறிக்கையை வன இலாக்காவிடம் கேட்டுப்பெறவேண்டும்.
16-யானைகளுக்கும் மேல் மரணம் அடைத்திருக்கும் நிலையில், தற்பொழுது புலியைச் சுட்டுப் பிடிக்க வேண்டும் என்று வாட்ஸ்ஆப்பில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்த தகவலை எப்படி வருகின்றது என்று கேள்வி எழுப்பிய அவர், வன அமைச்சர் தலைமை விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றது.
அந்த விசாரணையின் முடிவுதான் என்வென்று, நிகழ்ச்சி மேடையில் வனத்துறை அமைச்சரிடம் கேள்விகளைக் கேட்ட அவர், வன இலாக்கா கோவையில் மரம் வளர்க்கக் கேட்டுள்ளது.
400-ஏக்கரில் 250-ஏக்கரில் தண்ணீர் தான் உள்ளதாகவும், குளக்கரைகளைப் பதப்படுத்தி அமைத்துத் தருவதின் மூலமும், எங்களுக்கு வழிமுறைகளைக் கூறி வழி நடத்துவதன் மூலமும் மரங்களை நன்றாக வளர்க்க முடியும் என்றும், வன இலாக்காவிற்கு உட்பட்ட பகுதியில் இருக்க வேண்டிய தேனீ கூடுகள், சித்தாபுதூர் மேம்பாலத்தில் இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
இதனைக் குறித்து வன இலாக்காவிற்கு மனு அழித்த பொழுது, அவர்களிடம் பெரிய ஏணி இல்லை என்றனர், போலிஸாரிடம் கேட்ட பொழுது தங்களுக்கு இதற்கும் சம்மந்தம் இல்லை என்று நெடுஞ்சாலையிடம் புகார் அழிக்குமாறு சொன்னதை அடுத்து அவர்களிடம் கேட்ட புகார் கொடுத்த தருணத்தில் அவர்கள் கூறியது, எங்களிடம் பெரிய ஏணி உள்ளது.
ஆனால் போதிய ஆட்கள் தான் இல்லை என்றனர், என்ன தான் செய்வது? இதுபோன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும் என்று துறையின் முதன்மை செயலாளர் கேட்டுக்கொண்டது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்றார்.
வனத்தின் பரப்பளவை அதிகப்படுத்துவோம் என்று, திமுக தனது பரப்புரையில் குறிப்பிட்டு இருந்தது, அதனைச் செய்வதற்கு வனத்துறை அமைச்சருக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.