பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்.!!

நியாயம் கேட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்வதா? என கூறி பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யக்கோரி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நியாயம் கேட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்வதா? என பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யக்கோரி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் வேளாண் விரோத சட்டத்திற்கு எதிரான நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொடூர கொலை செய்த ஒன்றிய அமைச்சரின் மகனைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திர பிரதேச மாநில லக்கீம்பூரில் விவசாயிகள் மீது கொடூரமாக கார் ஏற்றி படுகொலை செய்த பாஜக ஒன்றிய அமைச்சர் மகன் உள்ளிட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமை தாங்கினார்.



இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ஒன்றிய அரசு உடனடியாக மூன்று வேளாண் விரோத சட்டங்களைத்திரும்பப் பெற வேண்டும், பலியான விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் தர வேண்டும். படுகொலைக்குக் காரணமான ஒன்றிய அமைச்சரின் மகன் உள்ளிட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டும்.

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்திய விவசாயிகளைப் பலி காடாக்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...