பவானி ஆற்றில் மீனவரை தண்ணீருக்குள் விரட்டிய யானைகளின் வீடியோ வைரல்.!!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரைத் தண்ணீருக்குள் விரட்டிய யானைகளின் வீடியோ தற்போது சமூக வலயதலங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரைத் தண்ணீருக்குள் விரட்டிய யானைகளின் வீடியோ தற்போது சமூக வலயதலங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 12 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வனப்பகுதியிலிருந்து மாலை நேரத்தில் வெளியேறும் அந்த யானை கூட்டம் அருகிலுள்ள வாழை தோட்டங்களில் வாழைகளைச் சேதப்படுத்துவது, பின்னர் அங்குள்ள பவானி ஆற்று நீரில் குளித்து மகிழ்வதும் என கடந்த 3 நாட்களாக யானைகளின் நடமாட்டம் லிங்காபுரம் பகுதியில் தொடர்ந்து இருந்து வருகிறது.



இந்நிலையில், இன்று காலை பவானி ஆற்றில் குளித்து விளையாடிய யானைகள், அங்கு மீன்பிடிக்கப் பரிசலில் சென்ற மீனவர் ஒருவரை தண்ணீரில் விரட்டிய நிகழ்வு அங்கிருந்த மக்களை ஆச்சியத்தில் ஆழ்த்தியுள்ளது.



இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், விஸ்கோஸ் ஆலையில் முகாமிட்டுள்ள 12 யானைகள், மாலை மற்றும், அதிகாலை நேரத்திலும் அங்கிருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் சுற்றி திரிகிறது.

மேலும், பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளதால், யானைகள் வனப் பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் குறையும் வரை இந்த யானைக் கூட்டம் இங்கே தான் இருக்கும் என்பதால், அப்பகுதி வழியாகச் செல்லும் பொது மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், என்று எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...