பொள்ளாச்சியில் பழங்கால நாணய கண்காட்சி துவக்கம்.!!

பொள்ளாச்சியில் பழங்கால நாணய கண்காட்சியில் வரலாற்றுச் சிறப்பு மன்னர் மற்றும் நாயக்கர் காலத்தின் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பழங்கால நாணய கண்காட்சியில் வரலாற்றுச் சிறப்பு மன்னர் மற்றும் நாயக்கர் காலத்தின் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி பகுதியில் ஆண்டு தோறும் நாணய கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் பழங்கால நாணய கண்காட்சி பொள்ளாச்சி தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இன்று முதல் மூன்று நாட்கள் நடக்க உள்ள இந்த நாணய கண்காட்சியில் சேர, சோழ, பாண்டிய., மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் மதுரை நாயக்கர் காலத்து நாணயங்கள், தஞ்சாவூர் நாயக்கர் காலத்து நாணயங்கள், உள்ளிட்ட பழங்கால நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன.



மேலும் ரிசர்வ் வங்கி தோன்றுவதற்கு முன்பே அப்போதைய இந்திய அரசால் 1918ல் முதல் முதலில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய்த் தாளில் பழமை மொழியான தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஆறு மொழிகள் அச்சிடப்பட்டிருந்ததும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 1000ரூபாய்த் தாள், வெளியீடுகளின் பழங்கால ரூபாய்த் தாள்களும் இந்த கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.



அதுமட்டுமின்றி மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பழமை வாய்ந்த பொருட்களும், அவர்களுடைய படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த கண்காட்சியைப் பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். கண்காட்சிக்கு வந்த நாணய சேகரிப்பாளர்கள் கூறுகையில், இந்த பழங்கால நானையம் மற்றும் பழமை வாய்ந்த பொருட்களின் கண்காட்சியைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்த்து நம் வரலாறுகளைப் பற்றியும் நம் தமிழர் பெருமைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...