சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.50-அடியாக உயர்வு.!!!

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.50-அடியாக உயர்ந்துள்ளதால் அடுத்த மார்ச் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது என அதிகாரி தகவல்.


கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.50-அடியாக உயர்ந்துள்ளதால் அடுத்த மார்ச் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது என அதிகாரி தகவல்.

கோவை மாநகராட்சியில் 26-வார்டுகள், நகரை ஒட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சிறுவாணி குடிநீர் நீராதாரமாக உள்ளது.

அணையிலிருந்து தினமும் குடிநீருக்காக 10-கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டமானது, படிப்படியாகக் குறைந்தது.

3-அடிக்கும் கீழே சென்றது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில மாதங்களாகச் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்குச் செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அன்மையில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 43.50-அடியாக உயர்ந்துள்ளது.

மாநகராட்சி சார்பாக 96-எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. அடுத்த வருடம் மார்ச் வரை குடிநீருக்கு எந்த பிரச்சனை இருக்காது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...