கோவை மாநகராட்சியின் 93-வது வார்டு அலுவலகத்தை தெற்கு மண்டல அலுவலகத்திற்கு மாற்ற கோரிக்கை.!!

கோவை மாநகராட்சி 93-வது வார்டு அலுவலகத்தை தெற்கு மண்டல அலுவலக வளாகத்திற்கு மாற்ற வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி 93-வது வார்டு அலுவலகத்தை தெற்கு மண்டல அலுவலக வளாகத்திற்கு மாற்ற வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் மெயின் ரோடு விஜயலட்சுமி மில் ஸ்டாப் அருகில் மாநகராட்சியின் 93-வது வார்டு அலுவலகம் செயல்பட்டு வந்தது. தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளுக்குச் செல்லும் முன் வார்டு அலுவலகம் வந்து கையெழுத்துப் போட்டுச் செல்வது வழக்கம்.

இதனிடையே 93-வது வார்டு அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக அதே பகுதியில் அருகில் உள்ள சக்தி நகருக்கு மாற்றப்பட்டது. மெயின் ரோட்டில் இருந்து 3-கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து தூய்மை பணியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘முன்னர் இருந்த வார்டு அலுவலகம் செல்ல பஸ் வசதி இருந்தது. காலை 6-மணிக்கு வார்டு அலுவலகம் வருவதற்கு வசதியாக இருந்தது. ஆனால் தற்போது மாற்றப்பட்டுள்ள இடத்திற்கு பஸ் வசதி இல்லை. மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. 93-வது வார்டு அலுவலகத்தை மண்டல அலுவலகமான மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திற்கு மாற்ற வேண்டும்,’’ என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...