பொள்ளாச்சியில் நவராத்திரி விழாவில் 8 மணிநேரம் பம்பை உடுக்கை அடித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் சாதனை.!!

பொள்ளாச்சியில் தொடர்ந்து 8-மணி நேரம் பம்பை, உடுக்கை அடித்து நாட்டுப்புறப் பாடல்கள் பாடி நாட்டுப்புற கலைஞர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தொடர்ந்து 8-மணி நேரம் பம்பை, உடுக்கை அடித்து நாட்டுப்புறப் பாடல்கள் பாடி நாட்டுப்புற கலைஞர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பொள்ளாச்சி அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியில் உள்ள மகுடேஸ்வரி திருக்கோவிலில் பம்பை மற்றும் உடக்கை கலைஞர்களின் 8 மணி நேரம் தொடர்ந்து பம்பை, உடுக்கை நாட்டுப்புறப்பாடல் பாடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 26-நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு கருப்புசாமி, சிவன், பார்வதி சாமி வேடமிட்டு பம்பை மற்றும் உடுக்கை கலைஞர்கள் தொடர்ந்து இடைவிடாது 8-மணி நேரம் நாட்டுப்புற பக்தி பாடல்கள் பாடி நோபல் உலக சாதனை ஈடுபட்டனர்.

இதில் நோபல் உலக சாதனை புத்தகம் பதிப்பாசிரியர் தியாகு நாகராஜன் கலந்து கொண்டு கண்காணித்து வந்தார்.

தொடர்ந்து காலை 9-மணி முதல் மாலை 5-மணி வரை இடைவிடாது நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கை வாசித்து நோபல் நிறுவனம் புத்தகத்தில் இடம் பெற்றனர்.



மேலும் இந்த சாதனையில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற சாதனை நிகழ்ச்சி நடத்தி நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க உதவியாக இருப்பதாகவும், தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...