விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கோவை: உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மத்திய இணை அமைச்சரின் மகன் வாகனம் மோதி 2 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இச்சம்பவத்தைக் கண்டித்து விவசாயிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி தலைமை தொலைபேசி நிலையம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் மகனே வாகனத்தை ஏற்றி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து நீதிபதி உத்தரவுப் படி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தை ஏற்றி விவசாயி படுகாயம் அடைந்துள்ளார்.
ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது வாகனத்தை ஏற்றுவதும், அடியாட்களை வைத்து மிரட்டுவதும், பொய் வழக்குப் போடும் முறை என்பது போராட்டக்காரர்களை ஒடுக்கும் செயலாகும்.
இந்த நிலையில், நாடு முழுவதும் விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. விவசாயிகள் வேதனை குரல் ஒன்றிய அரசுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.