பிரதமர் தலைமையிலான அரசு பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது- உத்தம் குமார் ரெட்டி.!!!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெரு முதலாளிகளான அம்பானி, அதானி, அமேசான் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 14-கோடி வேலை இழந்து உள்ளதாகத் தெலுங்கானா மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.



கோவை: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெரு முதலாளிகளான அம்பானி, அதானி, அமேசான் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 14-கோடி வேலை இழந்து உள்ளதாகத் தெலுங்கானா மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜ் பவனில் தெலுங்கானா மக்களவை உறுப்பினரும் முன்னாள் கேபினட் அமைச்சருமான உத்தம் குமார் ரெட்டி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.



உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் விபத்து ஏற்படுத்தி 8-பேர் உயிரிழந்த சம்பவம் காட்டுமிராண்டித் தனமானது எனவும் கண்டனத்திற்குரியது செயல் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தின் மிக அருகிலேயே வேறொரு நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த பிரதமர் மோடி ஏன் வருத்தம் கூட தெரிவிக்காதது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

விபத்து ஏற்படுத்தியவர்களைக் கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்காவை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

லக்கிம்பூர் விவகாரம் குறித்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் அமைதியாக இருப்பதை இந்திய மக்கள். அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் எனவும் இதுவரை உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஏன் மத்திய அமைச்சரை ராஜினாமா செய்யப் பிரதமர் கூறவில்லை என கேள்வி எழுப்பியவர் காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும் எனவும் உச்சநீதிமன்றம் இந்த விவாகரத்தில் தலையிடா விட்டால் உ.பி.காவலர்கள் வழக்கை மூடி மறைத்து விடுவார்கள் என்றார்.

பிரதமர் மோடி அம்பானி, அதானி, அமேசான் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமேசான் மற்றும் இ காமர்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்ட கட்டணமாக 8546 கோடி ரூபாய் செலுத்தி உள்ளதாகத் தெரிவித்து உள்ளது.

வெளிநாட்டு நிறுவனமாக அமேசான் இவ்வளவு பெரிய தொகையைச் சட்ட கட்டமாகக் கொடுத்துள்ளது என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க யோசித்து வருவதாகவும் சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்காக மாற்றப்படுவதால் சிறு குறு தொழில் முனைவோர் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 14 கோடி பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசில் முக்கிய புள்ளிகள் பண பலன் அடைந்துள்ளனர் என்றார்.

இது குறித்து பிரதமரோ அமைச்சர்களோ யாரும் வாய் திறக்கவில்லை எனவும் அமெரிக்க பேசி வருவதாகவும் அமேசான் நிறுவனமே தவறு நடந்து உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக எந்த மறுப்பையும் பாஜக தெரிவிக்காமல் உள்ளது இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றவர் அமெரிக்க அதிபருடனான சந்திப்பின் போது இது குறித்து கேள்வி எழுப்பவில்லை என கேள்வி எழுப்பிய உத்தம் குமார் ரெட்டி முதலாளிகளுக்காக மோடி அரசு செயல்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கடத்தி வரப்படுவதாகவும் சமீபத்தில் 3500 கிலோ ஹெரோயின் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் இதன் மதிப்பு 21 ஆயிரம் கோடி தான் எனவும் ஜூன், ஜூலை மாதத்தில் 25 ஆயிரம் கிலோ போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டதாகவும் இதன் மதிப்பு 1,75,000 கோடி என்றார்.

அதானி குழுமத்திற்குச் சொந்தமான துறை முகங்கள் மூலம் போதை பொருட்கள் கடத்தி வரப்படுவது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என தெரிவித்தார். லக்கிம்பூர் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா மற்ற மாநிலத்திற்குச் சென்றனரா? என்ற கேள்விக்கு உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூற செல்வது தவறா? என கேள்வி எழுப்பியவர் உயிரிழந்த குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடியில் ஒ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தோ அமைச்சரோ ஏன் ஆறுதல் கூட கூறவில்லை என்றார்.

இது மோடியின் விவசாயிகளுக்கு எதிரான நடைமுறையைக் காட்டுவதாகவும் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் எப்போதும் காங்கிரஸ் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மக்கள் நிற்கும் என்றார்.

உ.பி.காவல்துறையின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்த ஒன்று எனவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். 



இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாம் தமிழர் கட்சி சீமான் சமீபகாலங்களாகக் காங்கிரஸ் கட்சியை ஏற்க்கதகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றார். தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். சீமானின் கொள்கைகள் எடுபடாத நிலையில், இதுபோன்ற விமர்சனங்களைச் செய்து வருகின்றார். அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் வன்முறை பேசுவதால் விளம்பரம் தேடிக்கொள்கிறார்.

சென்னையில் DGP சைலேந்திரபாபுவிடம் இதனைப் பற்றி புகார்க்கொடுத்ததாகவும் மேலும், 7 தினங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது முழுக்க கட்சி சேர்ந்த புகாரே தவிர தனிப்பட்ட புகார் இல்லை என்று குறிப்பிட்டார்.

விமர்சனங்கள் என்பது பொதுவானவையே ஆனால் சீமான் அவர்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தவறான ரீதியில் விமர்சனம் செய்வது ஏற்கத்தக்க வகையில் இல்லை என்ற அவர், இது போன்ற சம்பவங்களை அரசாங்கம் தான் தடை செய்யவேண்டும் என்றார். இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...