கோவையில் 67-வது வன உயிரின வார நிறைவு விழா.!!

கோவை மாவட்டம்‌, வனவளாகத்தில்‌ அமைந்துள்ள தமிழ்நாடு வனஉயர்‌ பயிற்சியக நூற்றாண்டு விழா அரங்கில்‌ இன்று 67-வது வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம்‌, வனவளாகத்தில்‌ அமைந்துள்ள தமிழ்நாடு வனஉயர்‌ பயிற்சியக நூற்றாண்டு விழா அரங்கில்‌ 08.10.2021 அன்று 67-வது வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது.



இவ்விழாவில்‌ சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்‌, கலந்து விழா பேருரையாற்றி சிறப்பித்ததோடு மாநில மற்றும்‌ மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள்‌ வழங்கி சிறப்பித்தார்‌.

இவ்விழாவிற்குக் கூடுதல்‌ முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்‌ இயக்குநர்‌, தமிழ்நாடு வனஉயர்‌ பயிற்சியகம்‌, கோவை.T.V மஞ்சுநாதா, வரவேற்புரை ஆற்றினார்‌. மேலும்‌ கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டா்‌ G.S சமீரன்‌, முன்னிலை உரையாற்றினார்‌. முனைவர்‌ சேகர்‌ குமார்‌ நீரஜ்‌, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்‌ தலைமை வனஉயிரினக்‌ காப்பாளர்‌ விளக்கவுரை ஆற்றினார்‌.

விழாவில்‌ கோவை பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்‌ P.R நடராஜன்‌, பொள்ளாச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்‌ K.சண்முகசுந்தரம்‌, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்‌ அம்மன்‌, K.அர்ச்சுணன்,‌ முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்‌ தலைவர்‌ அரசு ரப்பா கழகம் சையத்‌ முஜம்மில்‌ அப்பாஸ்‌, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி மற்றும்‌ கல்வி) S.யுவராஜ்‌, மற்றும்‌ முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்‌ தலைவர் தமிழ்நாடு வனத்தோட்டக்கழகம், யோகேஷ்‌ திவேதி, ஆகியோர்‌ வாழ்த்துரை வழங்கினார்‌.

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்‌ (துறைத்தலைவர்‌) ௮சோக்‌ உபரேதி, விழாவிற்குத் தலைமையேற்று தலைமையும் ஆற்றினார்‌.



இவ்விழாவில்‌ தமிழக வனத்துறையில்‌ பணியாற்றும்‌ உயர்‌ அலுவலர்கள்‌, களப்பணியாளர்கள்‌, அனைத்து நிலை பணியாளர்கள்‌, வன ஆர்வலர்கள்‌, மாணவ, மாணவியர்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.



இவ்விழாவில்‌ ஒரு அங்கமாகக் கோவை வனக்கோட்டத்தின்‌ சின்னம்‌ (MASCOT)வனத்துறை அமைச்சரால்‌ வெளியிடப்பட்டு, மாநில அளவிலான ஓவியம்‌ வரைதல்‌, சின்னம்‌ (logo) உவமைக்கும்‌ போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம்‌, இருளர் ஆதிவாசி பழங்குடி மக்களின்‌ நடன நிகழ்ச்சி மற்றும்‌ யானை விழிப்புணர்வு பாடல்‌ ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன்‌ வன உயிரின வார நிறைவு நாள்‌ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவின்‌ இறுதியாகக் கோவை மாவட்ட வன அலுவலர்‌ T.K.அசோக்குமார்‌, நன்றியுரை கூறி தேசிய கீதத்துடன்‌ விழா நிறைவடைந்தது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...