ரயிலில் புகையிலைப் பொருட்களை கடத்திச் சென்றது குறித்து குற்றம் தடுப்பு மற்றும் கண்டறியும் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கோவை வழியாக செல்லக்கூடிய சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தப்பட்ட 45 கிலோ புகையிலைப் பொருட்களை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று திருப்பூர் - கோவை வழித்தடத்தில் செல்லும்போது, கோவை ரயில்வே பாதுகாப்பு படையால் அமைக்கப்பட்ட குற்றம் தடுப்பு மற்றும் கண்டறியும் பறக்கும் படையினர் (சி.பி.டி.எஸ்.,) சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் தனியே இருந்த பையை சோதனையிட்டபோது, ஒடிசாவில் தயாரிக்கப்பட்ட, 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.