மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலித்சேனா ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாதமாதம் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். கோவை வடக்கு மற்றும் தெற்கு தாலுகா அலுவலகங்களில் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அலுவலர்கள் காலதாமதப்படுத்தி வருகின்றனர். உடனடியாக புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் வழங்குவதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு கல்விக் கடன் வழங்காமல் வேண்டுமென்றே அலைக்கழித்து வரும் வங்கி அதிகாரிகளின் அத்துமீறல் செயலைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த நவம்பர் 8ம் தேதியன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டு தடையால் ஏழை நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசைக் கண்டித்தும் கோவை மாவட்ட தலித்சேனா சார்பாக செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு கோவை மாவட்ட தலைவர் வி.புஸ்பானந்தம் தலைமை வகிக்க வழக்கறிஞர் ஜி.சிவலிங்கம் வரவேற்புரையாற்றினார்.

அன்னை தெரசா அறக்கட்டளை மாநில தலைவர் மற்றும் நிறுவனர் முருகேசன் பெஞ்சமீன் முன்னிலை வகித்தார். அம்பேத்கர் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் நலச்சங்கம் தலைவர் தலீத் சு.ஜெயராஜ் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித்சேனா மாநில துணைத் தலைவர் சி.நொய்யல்சாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதவியாளர் (எளியோர் வரியோர் மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்) ஹே.பொதுவுடைமை கோவிந்தராஜ், சமூக ஆர்வலர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...