சரஸ்வதி பாட்டிக்கு வியாபாரம் செய்ய நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் அவரை 96263-78066 என்ற மொபைல் போனில் நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவி செய்யலாம். நல் உள்ளங்களின் உதவிக்குக் காத்திருப்பு.
கோவை: கோவையில் சுக்கு காபி விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வரும் மூதாட்டி வறுமையில் தவித்து வரும் நிலையில் நல் உள்ளங்களின் உதவிக்குக் காத்திருக்கிறார்.
ரங்கே கவுடர் வீதியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி என்பவர் கடந்த பல ஆண்டுகளாகச் சுக்கு காபி கடையை நடத்தி வந்தார். அவரது இரண்டு மகன்களுக்கும் பார்வை குறைபாடு. மகள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்.
இத்தனை துயரங்களைத் தாண்டி மிகுந்த சிரமத்திற்கு இடையே தொழில் செய்துவந்த குருசாமி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டுப் படுத்த படுக்கையாகி விட்டார். கடந்த ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகள் இறந்துவிடக் குருசாமியின் குடும்பத்துக்குத் துயரத்துக்கு மேல் துயரம் என்ற நிலை ஏற்பட்டது.
இத்தகைய சூழலில் அதுநாள்வரை இல்லத்தரசியாக இருந்துவந்த குருசாமியின் மனைவி சரஸ்வதி, முதுமை காலத்தில் குடும்ப பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்.

இதனால் கணவர் ரோட்டோரத்தில் ஒரு சிறிய இடத்தில் சுக்கு காபி கடையை நடத்தி வந்த அதே இடத்தில் சரஸ்வதி பாட்டி வியாபாரத்தைச் செய்து வருகிறார்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் முதல் அலை காரணமாகக் கடுமையாக நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து 'சிம்ப்ளிசிட்டி' ஆன்லைன் செய்தி ஊடகத்தில் முதலில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவர் குறித்த செய்தி பல்வேறு அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களில் வெளிவந்தன. இதன் காரணமாகச் சரஸ்வதி பாட்டிக்கு நிதி உதவி கிடைத்தது.
நம்பிக்கையுடன் மீண்டும் தனது பழைய வாழ்க்கையைத் தொடர்ந்த சரஸ்வதி பாட்டிக்கு கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கம் மிகவும் கடுமையாகப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது.
கடந்த முறை தனக்குக் கிடைத்த உதவியால் தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்ததாகவும் தற்போதுள்ள வறுமைச் சூழலில் ஏதேனும் உதவி கிடைத்தால் தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு மிகுந்த பயன்தரும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சரஸ்வதி பாட்டிக்கு வியாபாரம் செய்ய நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் அவரை 96263-78066 என்ற மொபைல் போனில் நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவி செய்யலாம்.