திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தர்ணா.!!!

திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தர்ணாவில் ஈடுபட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தர்ணாவில் ஈடுபட்டார்.

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கோயில் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கோயில், தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளது.

ஆகவே, இந்த சாலையில் செல்லும் மாணவியர்களுக்கும், வேலைக்குச்செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடையை வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர்-8) அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். இந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு இன்று காலையில் மதுபானங்கள் விற்பனைக்காக இறக்கப்படுவதாகப் பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 50- பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜும் பொதுமக்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கடையை உடனடியாக அகற்றுவதாக உறுதியளித்தனர்.



மேலும், பாரில் இருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...